புனித வெள்ளி அன்று தமிழ் நாடு முழுவதும் மதுகடைகளை மூட வலியுறுத்தி பரிசுத்த அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபை போதை நோய் நலப்பணிக்குழு சார்பில் தூத்துக்குடியில் திரு இருதய போராலயம் (சின்ன கோயில்) வளாகத்தில் வைத்து தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டிபன் அவர்கள் தலைமையில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் காலை முதல் நடைபெற்று வருகிறது.
மேலும், இந்த நிகழ்வில் முன்னாள் ஆயர் இவான் அம்புரோஸ், மறை மாவட்ட முதன்மை குரு ரவி காலன், மறை மாவட்ட செயலாளர் ஆண்றனி ஜெகதீசன், பொருளாளர் பிரதீப், சிஇஎப்ஐ தேசிய பொதுச் செயலாளர் ஸ்டீபன், அகில இந்திய ஜனநாயக சிறுபான்மை மக்கள் உரிமைத் தலைவர், ஜெயராஜ், சபைகளின் மாமன்ற தலைவர் ஆயர் ஜஸ்டஸ், பொதுச் செயலாளர் சாம் செல்வராஜ், துணைத் தலைவர் சாமுவேல் மோசஸ், பிஷப் கால்டுவெல் கல்லூரி முன்னாள் தாளாளர் ஜெபனேஷர் மங்களராஜ், உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்
AN. இன்பராஜ்
S. பிரவீன் குமார்