இன்று ஐப்பசி மாத பௌர்ணமி முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன் கோயில்களில் அன்னபிஷேகம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே திருமணஞ்சேரியில் உள்ள ஸ்ரீ சுகந்த பரமேஸ்வரர் உடனுறை பெரியநாயகி அம்பாள் ஆலயத்தில் சிவலிங்கத்திற்கு பால் தயிர் சந்தனம் தேன் இளநீர் மற்றும் பல்வேறு விதமான திரவப் பணிகளில் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிவலிங்கத்திற்கு பச்ச அரிசி சாதத்தை சாத்தி காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர்.
செய்தியாளர். பழனிவேல் …
