திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் முத்தரையர் சங்கத்தை சேர்ந்த சுயேட்சை கவுன்சிலர் ராஜேஷ் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார்.
அவரது நினைவு நாளை முன்னிட்டு தமிழர் தேசம் கட்சி மற்றும் வீர முத்தரையர் சங்கத்தின் சார்பாக நினைவேந்தல் பேரணி நடத்த திட்டமிடப்பட்டது.
பேரணியில் தமிழர் தேசம் கட்சி தலைவர் கே.கே. செல்வகுமார் மற்றும் திரளான தமிழர் தேசம் கட்சியினர் மற்றும் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தினர் பங்கேற்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதனிடையே சட்டம் ஒழுங்கு காரணம் காட்டி இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
இதை அடுத்து பேரணிக்காக முத்துப்பேட்டைக்கு செல்ல இருந்த தமிழர் தேசம் கட்சி தலைவர் கே.கே. செல்வக்குமாரை அறந்தாங்கியில் வைத்து போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதை அடுத்து கே.கே. செல்வகுமார் அறந்தாங்கியில் ஒரு தனியார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டார்.
இதனிடையே தமிழர் தேசம் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் குருமணிகண்டன் குளித்தலையில் அவரது வீட்டில் சிறை வைக்கப்பட்டார்…..
செய்தியாளர் ; ரூபன்