கீழ்வேளூர் ஒன்றியத்தில் மே 19 அன்று புதிய பாரத எழுத்தறிவு இயக்கம் சார்ந்த பயிற்சி தன்னார்வலர்களுக்கு நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர் திரு.அன்பழகன் தலைமையேற்றார் வட்டார வள மைய மேற்பார்வையாளர் திருமதி.த.அமுதா அவர்கள் அனைவரையும் வரவேற்றார், திரு.செல்வகுமார் ஐயா (களப்பணி அலுவலர்), அவர்கள் பயிற்சியில் கலந்துகொண்டு, தன்னார்வலர்களுக்கு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்கான ஆலோசனை வழங்கினார். ( Vocational training – தொழிற்பயிற்சி குறித்து தன்னார்வலர்களுக்கு விழிப்புணர்வு வழங்கினார்.

இந்த பயிற்சியில் JAN SHIKSHA SANSTHAN – JSS அமைப்பினுடைய இயக்குனர், திரு.பன்னீர்செல்வம் அவர்களும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தினுடைய அலுவலர் திருமதி. கனிமொழி அவர்களும் பயிற்சியில் கலந்து கொண்டு, learners ஐ எப்படி தொழில் முனைவோராக மாற்றலாம், அதற்கான வாய்ப்புகள் என்னென்ன உள்ளது என்பதை மிக விரிவாக எடுத்துரைத்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.மார்டின் அவர்கள் பாடப்பொருள் குறித்தும், தேர்வுகள் குறித்தும் எடுத்துரைத்தார்.90 தன்னார்வலர்கள் இப்பயிற்சியில் கலந்து கொண்டு பயனடைந்தனர். தன்னார்வலர்களுக்கு மதிய உணவு மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.
செய்தியாளர்
ஜிபி மார்க்ஸ்