Tuesday, January 20, 2026
No menu items!
HomeUncategorizedபிஷப் ஹீபர் கல்லூரியில் உயிர் தகவல் துறை சார்பில் மரபுசார் நெல் வகைகள் மற்றும் தானியங்கள்...

பிஷப் ஹீபர் கல்லூரியில் உயிர் தகவல் துறை சார்பில் மரபுசார் நெல் வகைகள் மற்றும் தானியங்கள் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி உயிர் தகவலியல் துறை சார்பில் நடந்தது

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் உயிர் தகவலியல் துறை சார்பில் மரபுசார் நெல் வகைகள் மற்றும் தானியங்கள் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பிரின்சி மெர்லின் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில்
பாரம்பரிய நெல் பேரவை தலைவர் மருத்துவர் ரகுநாதன் விஸ்வநாதன், மற்றும் திருவாரூர் திருத்துறைப்பூண்டி நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரபுசாரா நெல் வகைகள் மற்றும் தானியங்கள் சிறப்பு குறித்து விரிவாக எடுத்து பேசினார்கள்.


மேலும் மாணவர்கள் பாரம்பரிய நெல் வகைகளை பாதுகாக்கும் அடிப்படையிலான ஆராய்ச்சியில் ஈடுபட
ஊக்குவித்தனர்.முன்னதாக மரபு சார் நெல் வகைகள் மற்றும் தானியங்கள் குறித்த கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில்
ஊட்டச்சத்து மற்றும் விவசாய முறைகளில் முக்கிய பங்கு வகித்த பல பாரம்பரிய நெல் வகைகள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. இதில் தற்போது பல நெல் வகைகள் கலப்பின விதை சார்பு ஒற்றை பயிர் சாகுபடி மற்றும் தொழில்துறை விவசாய நடைமுறைகள் காரணமாக ஆபத்தில் உள்ளன உணவு பாதுகாப்பு மரபணு பின்னடைவு கலாச்சார தொடர்ச்சி காலநிலை தழுவல் மற்றும் நிலையான விவசாயத்தில் எதிர்கால ஆராய்ச்சி ஆகியவற்றுக்கு இந்த விதைகளை பாதுகாப்பது முக்கியமானது என்று கண்காட்சி வலியுறுத்தியது.
தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் பாதுகாக்கப்பட்ட நிலங்களின் பன்முகத்தன்மை தனித்துவம் மற்றும் மூதாதையர் பாரம்பரத்தை ஆராய இந்த கண்காட்சி ஒரு அறிய வாய்ப்பாக அமைந்தது. கண்காட்சியில் ஊட்டச்சத்து மற்றும் விவசாய முறைகளில் முக்கிய பங்கு வகித்த பல பாரம்பரிய நெல் வகைகள் காட்சிப்படுத்தப்பட்டது. இதில் தற்போது பல நெல் வகைகள் கலப்பின விதை சார்பு ஒற்றை பயிர் சாகுபடி மற்றும் தொழில்துறை விவசாய நடைமுறைகள் காரணமாக ஆபத்தில் உள்ளன உணவு பாதுகாப்பு மரபணு பின்னடைவு கலாச்சார தொடர்ச்சி காலநிலை தழுவல் மற்றும் நிலையான விவசாயத்தில் எதிர்கால ஆராய்ச்சி ஆகியவற்றுக்கு இந்த விதைகளை பாதுகாப்பது முக்கியமானது என்று கண்காட்சி வலியுறுத்தியது.இந்த கண்காட்சியை ஏராளமான மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். நிகழ்ச்சியை உயிர் தகவலியல் துறை தலைவர் அகிலா மற்றும் உதவி பேராசிரியர் ஜெபஸ்டின் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version