Sunday, December 22, 2024
No menu items!
HomeUncategorizedபிளேடால் கிழித்தும், சிகரெட்டால் சூடுவைத்தும் குழந்தையை துன்புறுத்திய தந்தை. ஆப்பு வைத்த‌ அதிராம்பட்டினம் காவல்துறை.

பிளேடால் கிழித்தும், சிகரெட்டால் சூடுவைத்தும் குழந்தையை துன்புறுத்திய தந்தை. ஆப்பு வைத்த‌ அதிராம்பட்டினம் காவல்துறை.

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31 இவருக்கு திருமணமாகி 4 வயதில் பெண் குழந்தை ஒன்று இருக்கிறது.

குடும்ப சூழல் காரணமாக, குழந்தையின் தாய் மலேசியாவிற்கு பணிக்காக. சென்றாதக கூறப்படுகிறது. இந்த நிலையில் மது போதைக்கு அடிமையான பாலசுப்பிரமணியன் பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார் மது குடிக்க பணம் இல்லாமல் விரக்தியில் இருந்த இவன் அவ்வப்போது குழந்தையை துன்புறுத்தி வீடியோ எடுத்து மனைவியிடம் பணம் கேட்டிருக்கிறார்.

வேதனையில் துடித்த தாய் சிவரஞ்சனி

அவ்வப்போது மது போதையில், இருக்கும் இவன் குழந்தையை பிளேடால் கிழித்தும், சிகரெட்டால் சூடுவைத்தும் துன்புறுத்தி வந்துள்ளார்.

இது குறித்து காவல்துறையின் கவனத்திற்கு சமூக ஆர்வலர்கள் கொண்டு சென்றனர், இதனை அடுத்து களத்தில் இறங்கிய அதிராம்பட்டினம் காவல்துறையினர் துரிதமாக சம்பந்தப்பட்ட குழந்தையை மீட்டு தஞ்சை குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

அதன்பின்னர் குற்றவாளியை போலிசார் கைது செய்தது உரிய விசாரணையில் மனைவியை ஊருக்கு வர வைப்பதற்கு இது போன்ற வன் செயலில் ஈடுபட்டத்தாகவும், மது போதையில் குழந்தையை துன்புறுத்தியதையும் ஒப்பு கொண்டார்.

இதனை அடுத்து பல்வேறு குற்ற வழக்குகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு சிறைக்கு அடைக்கப்பட்டார்.

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version