வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க கோரி
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வன்னியர் சங்கம், பா.ம.க சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ..
திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும், அனைத்து சமூகத்தினருக்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் வக்கீல் பென்னட் ராஜ் தலைமை வகித்தார் .திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் மனோகரன் வரவேற்றார். மாநிலத் துணைத் தலைவர் வெங்கடாசலம் ,மாநில இளைஞர் சங்க செயலாளர் பாஸ்கர் ,மாநகர் மாவட்ட தலைவர் பழனிச்சாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் மற்றும் திருச்சி மேற்கு மாவட்ட செயலாளர் சுந்தரம் ஆகியோர் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
