தஞ்சை ஆற்றுப்பாலம் அருகே பத்திரிக்கையாளர் மன்றம் மற்றும் படிப்பகம் என்ற பெயரில் பத்திரிக்கையாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட முன்னாள் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தஞ்சாவூர் மாநகராட்சியின் ரூ. 10 லட்சம் நிதியின் மூலம் சீரமைக்கப்பட்ட பழைய பிஆர்ஓ அலுவலகத்தை திறந்து வைத்ததை தொடர்ந்து, அந்தக் கட்டிடத்தை நல்ல முறையில் பேணி பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு சிலர் மாவட்ட ஆட்சியரிடம் தவறான தகவல்களை கொடுத்து அந்த இடத்தை அதாவது பத்திரிக்கையாளர் மன்றத்தை அரசை எடுத்துக் கொள்ளும் வகையில் முயற்சி செய்து புகார்களை அனுப்பி இருந்தனர். நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தனர். அதனைப் பார்த்த நீதி மன்றமும் இப்பிரச்சினையை மாவட்ட ஆட்சியரே முடிவு செய்து கொள்ளட்டும் எனக் கூறியிருந்த நிலையில், 60க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்களிடம் எந்தவித விளக்கமும் மாவட்ட ஆட்சியர் கேட்காமல், தற்போது பத்திரிகையாளர்கள் அந்த இடத்தை காலி செய்யும் வகையில் மாவட்ட ஆட்சியர் அந்த இடத்திற்கு மாத வாடகையாக ஒரு லட்சத்து 6 ஆயிரத்து இருநூற்று முப்பது ரூபாய் வாடகையாக சார் பதிவாளர் நில மதிப்பு மற்றும் கட்டிடத்துடன் என்று அவர்கள் கணக்குப்படி மாதம் ஒன்றுக்கு இந்த வாடகையை நியமிப்பதாக கடந்த நான்காம் தேதி அறிவித்துள்ளார்.

நம் பகுதியின் அமைச்சர் கோவி. செழியன் பாராளுமன்ற உறுப்பினர் முரசொலி சட்டமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகரன், டிகேஜி.நீலமேகம் உள்ளிட்ட அனைவரும் மாவட்ட ஆட்சியரிடம் ஐந்தாயிரத்திற்கு குறைவாக வாடகை நியமிக்கும் படி அறிவுறுத்தியும் அவர்களின் எந்த பேச்சையும் கேட்காமல் மாவட்ட ஆட்சியர் ஏன் பத்திரிகையாளர்களை இந்த மாதிரி வச்சி செய்கிறார் என்று தெரியவில்லை .ஒரு பத்திரிக்கையாளர் மன்றத்திற்கு 1,06,230, கட்டும் அளவிற்கு பத்திரிக்கையாளர்கள் அங்கு என்ன செய்யப் போகிறார்கள்.? அந்தத் தொகையை எப்படி வசூல் செய்து கட்டுவார்கள்? அந்த இடத்தில் ஏதாவது தொழில் சார்ந்த விஷயங்கள் நடக்கிறதா.? பயனற்றுக் கிடந்த இடத்தை சரி செய்து தஞ்சையின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அனைத்து கட்சியை சார்ந்தவர்களும் தங்களால் முயன்ற பொருட்களை கொடுத்து இன்று அனைத்து பத்திரிகையாளர்களும் ஒரே இடத்தில் அமர்வதற்கு ஏற்பாடு செய்த நிலையில் மாவட்ட ஆட்சியர் ஏன் அதனை சீர்குலைக்க நினைக்கிறார் என்பது தெரியாமல் பத்திரிக்கையாளர்கள் அனைவரும் கலங்கி நிற்கின்றனர். பத்திரிகையாளர்கள் பயன்படுத்தும் கட்டிடத்துக்கு மட்டும் வாடகையை நிர்ணயிக்காமல் பின்னால் உள்ள குப்பை கிடங்குக்கும் வாடகையை நிர்ணயம் செய்தது ஏன்,

மாவட்ட ஆட்சியர்கள் எத்தனையோ பேர் வந்து சென்றிருக்கின்றார் ஆனால் இது போல யாரும் நடந்து கொள்ளவில்லை பத்திரிகையாளர் மீது வெறுப்பை காட்ட வேண்டிய அவசியம் என்ன என்பதை தெரியாமல் கலங்கி நிற்கின்றனர் தஞ்சை பத்திரிக்கையாளர்கள். பதில் சொல்வாரா மாவட்ட ஆட்சியர் பொறுத்திருந்து பார்ப்போம்.
செய்தி – கார்த்திக்