தஞ்சை தாலுக்கா காவல் நிலையத்திற்கு உட்பட்ட விளார் சாலை கலைஞர் நகர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநர்கள் முன்விரோதத்தில் சசிகுமார் என்கிற இளைஞர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவ இடத்தில் தாலுக்கா காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பட்டப்பகலில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தஞ்சை மக்களை பதற வைத்துள்ளது.