ஸ்ரீரங்கம் பகுதியில் தினசரியாக கனிம வளங்களை லாரி லாரியாக தொடர் மணல் கொள்ளை ஈடுபடும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க பாரபட்சம் காட்டபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது- அரசியல் பின் புலம் காரணமா? இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கபடுமா? திணறும் ஸ்ரீரங்கம் காவல்துறை. ஸ்ரீரங்கத்தில் எந்த தடையின்றி சுலபமாக பட்டபகலில் மணல் கொள்ளை நேற்று நவ.18, நண்பகல் 12:10 மணியளவில் பஞ்சக்கரை சாலையில் யாத்ரி நிவாஸ் , ரயில்வே சப்-வே வழியாக நுழைந்து செல்லும் டிப்பர் லாரி முழுவதும் சட்ட விரோதமாக மணலை எற்றி செல்லும் ஸ்ரீ திருச்செந்தூர் முருகன் துணை என்ற பெயர் கொண்ட லாரி எண் TN 22 BA 4879 என்ற வாகனத்தில் மணல் கடத்தி செல்லும் போது எடுக்கபட்ட படம்.