கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் அவர்கள் கிருஷ்ணகிரி பெங்களூரு சாலையில் பழைய வீட்டு வசதி வாரியத்திற்கு எதிரே உள்ள கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பி.கிறிஸ்து வில்சன் அவர்களின் பகுத்தறிவு ஸ்டேஷனரி & பேன்சி கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து வாழ்த்துக்கள் கூறினார். நிகழ்வில் திமுகவினர் பலரும் உடன் இருந்தனர். இந்தப் பகுத்தறிவு கடையில் பென்சிலில் வாய்ப்பாடு, அரிய தகவல்களுடன் எழுதும் புத்தகம், வித்தியாசமான பேனாக்கள், பெண்களுக்கு தேவையான அனைத்து விதமான அழகு சாதன பொருட்கள் என புதுவிதமான வடிவங்களில் பொருட்கள் இருப்பதால் பொதுமக்கள் பலரும் ஆர்வமாக கடைக்கு வருகை தந்து பொருட்களை வாங்கி சென்றனர்
M.நந்தகுமார்
கிருஷ்ணகிரி செய்தியாளர்