Sunday, September 8, 2024
No menu items!
HomeUncategorizedநீட் தேர்வு 2024 - முறைகேடு ஆசிரியர் கைது...

நீட் தேர்வு 2024 – முறைகேடு ஆசிரியர் கைது…

இந்தியாவில் மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு 2017ல் தொடங்கிய தற்போது வரை பல எதிர்ப்புகளையும் தாண்டி வருடா வருடம் நடைபெற்று வருகிறது. கடந்த சில வருடங்களாக நீட் தேர்வில் முறைகேடுகள் நடப்பது வாடிக்கையாகியுள்ளது. ஆள் மாறாட்டம் செய்வது போன்ற குளறுபடிகள் ஒரு சில இடங்களில் நடைபெற்று வந்த நிலையில் 2024 இந்த வருடமும் குளறுபடிகள் தேர்வில் நடந்துள்ளன.

திடீரென வெளியிட்ட தேர்வு முடிவுகள் :

ஜூன் 4 இந்திய லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகி அனைவரும் இந்திய நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், யாரும் எதிர் பார்க்காத விதமாக அன்றே நீட் தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன. தேர்தல் முடிவு நாள் அன்று வெளியிடப்பட்டதால் நீட் தேர்வு முடிவுகளை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
தேர்வு முடிவுகள் வெளியாகி அவற்றை பார்க்கும் பொழுது இந்தியாவில் 67 மாணவர்கள் நீட் தேர்வில் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

முதல் இரண்டு இடங்களில் குளறுபடி :

நீட் தேர்வில் 67 மாணவர்கள் முழு மதிப்பனாகிய 720 க்கு 720 மதிப்பெண் பெற்றுள்ளனர். இருப்பினும் அந்த 67 மாணவர்களில் குறிப்பிட்ட ஆறு மாணவர்கள் ஒரே தேர்வு அறையில் தேர்வு எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது.
அது மட்டும் இன்றி நீட் தேர்வு அதிகாரப்பூர்வ இணையத்தில் வெளியிட்ட தரவரிசை பட்டியலில் இரண்டாவது மூன்றாவது மதிப்பெண்கள் 718 மற்றும் 719 என குறிப்பிடப்பட்டுள்ளது. நீட் தேர்வில் ஒரு வினாவிற்கு நான்கு மதிப்பெண்ணும், ஒரு வினா தவறாக இருந்தால் தவறான வினாவிற்கு ஒரு மதிப்பெண் பெறப்பட்ட மதிப்பெண்ணிலிருந்து கழிக்கப்படும். அப்படிப் பார்த்தால் 718,719 போன்ற இலக்கங்கள் முடிவுகளாக வர வாய்ப்பே இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்ற பொழுது, எப்படி இந்த மதிப்பெண்கள் மாணவர்கள் பெற்றிருக்க முடியும் என்று கேள்வி எழும்புகிறது?
இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்கும் பொழுது அந்த குறிப்பிட்ட மாணவர்களுக்கு கிரேஸ் மார்க் வழங்கியதாக கூறப்படுகிறது. இருப்பினும் இரண்டு மாணவர்களுக்கு எந்த அடிப்படையில் கிரேஸ் மார்க் வழங்கப்பட்டது என்று தெரியவில்லை.

ஆசிரியர்கள் கைது :

குஜராத்தில் உள்ள ஒரு நீட் தேர்வு மையத்தில் உள்ள குறிப்பிட்ட சில மாணவர்களை தேர்வு கண்காணிப்பு ஆசிரியர்கள் மால் ப்ராக்டீஸ் செய்ய அனுமதித்துள்ளனர். அதாவது குறிப்பிட்ட மாணவர்களிடம் 10 லட்சம் ரூபாய் லஞ்சமாக பெற்று அவர்களை தேர்வு அறையில் சுதந்திரமாக விட்டு, அவர்கள் கலந்துரையாடி வினாக்களுக்கு விடை தேர்ந்தெடுத்து நீட் தேர்வில் முழு மதிப்பெண் பெற்றது தெரியவந்துள்ளது.
ஒரு இயற்பியல் ஆசிரியர், தேர்வு துணை கண்காணிப்பாளர் என மூன்று ஆசிரியர்கள் குஜராத் போலீசாரால் கிரிமினல் வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். (Gujarath,Godhra taluka police)
லஞ்சமாக பெறப்பட்ட 10 லட்சம் ரூபாயில் 7 லட்சத்தை சம்பந்தப்பட்ட ஆசிரியரின் வாகனத்திலிருந்து போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

நீட் தேர்வு எழுதுவதற்கு பல ஆடை விதிமுறைகளும், பெண்கள் மூக்குத்தி, தோடு போன்ற அணிகலன்களை அணிவதைக்கூட தடை செய்தல், தேர்விற்கு இரண்டு நிமிடம் தாமதமாக வந்த மாணவ மாணவிகளை தேர்வு அறைக்குள் அதாவது தேர்வு வளாகத்துக்குள்ளேயே அனுமதிக்காத நிலை போன்ற கடும் கட்டுப்பாட்டின் கீழ் நீட் தேர்வு நடைபெறுவதாக மக்கள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் தேர்வு வளாகத்துக்குள் இது போன்ற அட்டூழியங்கள் நடைபெறுவது நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்விற்கு சரியான பயிற்சிக்கு பணம் இல்லாமல் நீட் தேர்வில் தோல்வியடைந்து பல மாணவர்கள் தன் உயிரையும் மாய்த்துக் கொள்ளும் சூழலில், பணத்தை வைத்து தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கும், அதற்கு துணை நிற்கும் ஆசிரியர்களும் அதிகாரிகளும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

அ.காவியன்
செய்தியாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version