Monday, December 23, 2024
No menu items!
HomeUncategorizedநகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்

நகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்

Youtube மூலம் பிரபலமான பிஜிலி ரமேஷ் நட்பே துணை, கோமாளி போன்ற படங்களில் நடித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு ஹிப் ஹாப் ஆதி நடித்த நட்பே துணை படத்தின் மூலம் தமிழ் துறையில் அறிமுகமானவர் பிஜிலி ரமேஷ்.

Youtube-ல் நகைச்சுவை மூலம் பிரபலமான பிஜிலி ரமேஷ் பிரபல தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் பாதியிலேயே அவர் வெளியேற்றப்பட்டார். அவருடைய நகைச்சுவை உடல் அசைவாலும் வசனங்களை வெளிப்படுத்தும் விதத்தின் மூலமும் நகைச்சுவையாக பல மக்களின் மனதில் நிலைத்திருந்தவர் பிஜிலி ரமேஷ். அவர் காத்து வாக்குல ரெண்டு காதல், கோலமாவு கோகிலா, நட்பே துணை, கோமாளி, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, ஜாம்பி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பல திரைப்படங்களில் சிறுசிறு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்த பிஜிலி ரமேஷ் கொரோனாவுக்கு பின்னர் அவருடைய பட வாய்ப்புகள் குறைய தொடங்கின. அதிக குடிப்பழக்கத்தின் காரணமாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின் மருத்துவ சிகிச்சையில் அவருக்கு கேன்சர் இருப்பது உறுதி செய்யப்பட்டது. பல காலம் சிகிச்சை எடுத்து வந்த பிஜி நேரமே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பல திரைப்படங்களும் அவருக்கு மருத்துவ உதவிகள் செய்து வந்த நிலையில் இன்று 27/8/2024 அதிகாலை அவர் உயிரிழந்தார். அவருடைய இந்த இழப்பிற்கு பல திரைப்படங்களும், சக திரைப்பட நண்பர்களும், பொதுமக்களும், அவரது ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
அவருடைய இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர்
அ.காவியன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version