திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சூக்கலாம்பட்டி கிராமத்தில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன.

அத்தியாவசிய தேவைகளுக்காகவும் மருத்துவ உதவிக்காகவும் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாகநல்லூர் பகுதிக்கு செல்ல வேண்டி உள்ளது.
பள்ளி மாணவ மாணவிகள் தினமும் 5 கிலோமீட்டர் தூரம் நடந்தே பள்ளி செல்ல வேண்டியது கட்டாயத்தில் உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் விரைவாக நடவடிக்கை எடுத்து சூக்கலாம்பட்டி பகுதிக்கு பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்….
செய்தியாளர் ; ரூபன்ராஜ்