திருச்சி மாவட்டம் துறையூர் அருகே தென் திருப்பதி என்று அழைக்கப்படும் பெருமாள் மலை அடிவாரம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவில் புரட்டாசி இரண்டாவது சனி கிழமையை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
இதில் பாதயாத்திரையாக நடந்து சென்ற பக்தர்கள் இரண்டாவது மண்டபம் அருகே சென்ற பொழுது அங்கிருந்த தேன் கூட்டில் இருந்த தேனீக்கள் கலைந்து வந்து பக்தர்களை கடித்தது.
இதில் 70க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயம் அடைந்தனர்.
காயமடைந்த
அனைவரும் துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்…
செய்தியாளர்; ரூபன்ராஜ்