துறையூர் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தில் நடைபெறும் சாலை பணிகளை தரட்டுப்பாடு நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ஜோதிபாசு ஆய்வு செய்தார்.
திருச்சி மாவட்டம் துறையூர் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தின் மூலம்
ரூ.550 லட்சம் மதிப்பில் சொரத்தூர், கீழக்குன்னுபட்டி,நடுவலூர் கரட்டாம்பட்டி,மூவானுர், சிறுகாம்பூர் ஆகிய பகுதிகளில் சாலை புதுப்பிக்கும் பணி நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது.
இந்நிலையில் துறையூர் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தில் நடைபெறும் சாலை பணிகளின் தரத்தினை கண்டறிய தரக்கட்டுப்பாடு நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ஜோதிபாசு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது துறையூர் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உதவி கோட்ட பொறியாளர் நல்லதம்பி உதவி பொறியாளர் சோலை முருகன்,சாலை ஆய்வாளர் மற்றும் சாலை பணியாளர்கள் உடன் இருந்தனர்……
செய்தியாளர் ; ரூபன்ராஜ்