தமிழகம் முழுவதும் முதல்வர் மருந்தகங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அதை தொடர்ந்து திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரை அறுகே அமைந்துள்ள முதல்வர் மருந்தகத்தை துறையூர் சட்ட மன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் குத்து விளக்கு ஏற்றி வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் மாவட்ட பொருளாளர் தர்மன் ராஜேந்திரன், திமுக நகர செயலாளர் மெடிக்கல் முரளி ஒன்றிய செயலாளர் வீரபத்திரன், நகர்மன்ற தலைவர் செல்வராணி, மலர்மன்னன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்……
செய்தியாளர் ; ரூபன்ராஜ்