Thursday, October 30, 2025
No menu items!
HomeUncategorizedதிருவோணம் அருகே வெட்டிக்காட்டில் இன்று காலை கல்லூரி மாணவிகள் கூடுதலாக பேருந்து இயக்கப்பட வேண்டும் என...

திருவோணம் அருகே வெட்டிக்காட்டில் இன்று காலை கல்லூரி மாணவிகள் கூடுதலாக பேருந்து இயக்கப்பட வேண்டும் என சாலை மறியல் ஈடுபட்டனர்

கந்தர்வகோட்டை,கரம்பக்குடி, திருவோணம், ஊரணிபுரம், சில்லத்தூர், வெட்டிக்காடு ஆகிய பகுதியில் இருந்து தினந்தோறும் ஒரத்தநாடு பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுமார் 3500 மாணவிகள் படித்து வரும் நிலையில் இப்பகுதியில் இருந்து சுமார் 1500-க்கும் மேற்பட்ட மாணவிகள் தினந்தோறும் செல்கின்றனர் காலை கறம்பகுடியிலிருந்து காலை 7.30.8.30 மணியளவில் 2 பஸ்கள் செல்கிறது. அந்த 2 பஸ்களில் திருவோணத்திலேயே கூட்டம் நிரம்பி படியில் மாணவிகள் தொங்கிக்கொண்டு செல்கின்ற நிலை உள்ளது.

மேலும் வெட்டிக்காலிருந்து நடந்தே சென்று
வேன், மோட்டார் சைக்கிள்களில் உதவி கேட்டு செல்கின்ற நிலை உள்ளது மேலும் காலதாமதமாக மாணவிகள் கல்லூரிக்கு சென்றால் கல்லூரியில் மாணவிகளின் அடையாள அட்டை பறிமுதல் செய்வதோடு வருகை பதிவேட்டில் ஆப்சென்ட் அழித்து விடுவதாக மாணவிகள் வேதனைப்படுகின்றனர் இந்த ஆண்டு கல்லூரி துவங்கிய நாள்முதல் இந்த நிலை நீடித்து கொண்டே வருகிறது இந்நிலையில் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் கூடுதலாக பேருந்து விட வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கூடுதல் பேருந்து இயக்கப்படவில்லை என புகார் கூறப்படுகிறது இந்நிலையில் இன்று காலை கல்லூரிக்கு செல்ல வெட்டிக்காடு ஆற்று பாலம் அருகே காத்திருந்த மாணவிகள் அப்போது கரம்பக்குடியில் இருந்து வந்த ஒரு அரசு பேருந்தில் படியில் பொங்கிக் கொண்டு வந்தது பேருந்து மேலும் காத்திருந்த மாணவிகள் கல்லூரிக்கு செல்ல முடியாத நிலை இருந்தது உடனடியாக மாணவிகள் அனைவரும் சாலையில் இறங்கி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் வெட்டிக்காட்டில் இருந்து ஒரத்தநாடு தஞ்சாவூர் ஊரணிபுரம் வழியாக செல்லும் பேருந்துகள் வாகனங்கள் சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது தகவல் அறிந்த ஒரத்தநாடு போலீசார் மற்றும் திருவோணம் வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்தனர் பிறகு ஒரத்தநாடு அரசு போக்குவரத்து டெப்போ மேலாளருக்கு தகவல் கொடுக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு டெப்போ மேலாளர் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் கூடுதலாக காலை மாலை பேருந்துகள் விடப்படும் என உறுதி கூறியதின் அடிப்படையில் மாணவிகள் கலைந்து சென்றதுடன் கல்லூரிக்கு செல்ல கூடுதலாக நின்ற மாணவிகளுக்கு மாற்று அரசு பஸ் ஒரத்தநாடு டெப்போவில் இருந்து வரவழைக்கப்பட்டு மாணவிகள் கல்லூரிக்கு சென்றனர்,
செய்தியாளர்.பழனிவேல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version