தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே உள்ள வாட்டாதிக்கோட்டை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட மந்திக்கோன்விடுதி பகுதியில் ஒரு மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக வாட்டாதிக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் வீரபாண்டியன் க்கு ரகசிய தகவல் கிடைத்தது இதை அடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் ரகசிய ரோந்து பணியில் ஈடுபட்டார் அப்போது இடையாத்தி மந்திக்கோன்விடுதி பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் வயது 48 என்பவர் தனது மளிகை கடையில் தடை செய்யப்பட்ட குட்காவை விற்பனை செய்த போது கையும் களவுமாக பிடித்து சப் இன்ஸ்பெக்டர் வீரபாண்டியன், மற்றும் வாட்டாதிக்கோட்டை போலீசார் ஐயப்பன் கடை மற்றும் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டனர் அப்போது தடை செய்யப்பட்ட சுமார் 7 1/2 கிலோ குட்கா பறிமுதல் செய்து ஐயப்பன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் மேலும் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவர் மீது பயங்கரமாக நடவடிக்கை எடுக்கப்படும் என வாட்டாதிக்கோட்டை காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் வீரபாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்,