அரியலூர் மாவட்டம். திருமானூர் ஸ்ரீராம் நகர் சாமிவாசன் என்பவர் இன்று 20.12.25 சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் சாத்தமங்கலத்தைச் சேர்ந்த அத்தை சிலம்பரசி என்பவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் திருமானூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் காண்பித்து விட்டு திரும்பி சாத்தமங்கலத்தில் உள்ள வீட்டில் அத்தையை விட்டுவிட்டு ,
திருமானூர் சாமிவாசன் செல்லும் போது ஏலாக்குறிச்சி ரோட்டில் உள்ள சத்திரத்தேரி முன்பாக காரின் முன்பெறம் புகை வந்துள்ளதால் திடுகிட்டவர் கீழே இறங்கி பார்த்துக்கொண்டிருந்த சில நொடிகளிலேயே கார் மளமளவென தீப்பற்றி எரிய தொடங்கியதையடுத்து. சாமிவாசன் பாதுகாப்பாக விலகி தூர வந்துவிட்டார். இதுகுறிந்து தகவலறிந்த திருமானூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். சாலையில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவத்தால் திருமானூர் ஏலாக்குறிச்சி சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.
எம்.எஸ்.மதுக்குமார்.
