திருச்சி உழவர்சந்தை பகுதியில் இன்று நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் K.N.நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி , மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்களும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக முன்னோடிகளும், திராவிட முன்னேற்ற கழக முன்னோடிகளும் பெருந்திரளாக திரண்டு திருச்சி நாடாளுமன்ற அலுவலகத்தை திறந்து வைத்தனர். M.P. துரை வைகோ அவர்கள் திருச்சி பொதுமக்கள் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்வேன் என்ற உறுதி மொழி அளித்தார்.