திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட TVS டோல்கேட் பகுதியை TVS டோல்கேட் என அழைக்கப்படுவதனை மாற்றி,
கலைஞர் டோல்கேட் என பெயர் மாற்றம் செய்யப்படும் என நேற்று நடைபெற்ற மாநகராட்சி வரவு செலவு நிர்வாண கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் அதிமுக குழு தலைவர் அம்பிகாபதி கவுன்சிலர் மற்றும் கவுன்சிலர் அனுசுயா ஒரு மாமன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து பல தரப்பினரும் டிவிஎஸ் டோல்கேட் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் தற்போதுள்ள டிவிஎஸ் டோல்கேட் என்ற பெயரிலேயே தொடர்ந்து அழைக்கப்படும்.
என திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்….
செய்தியாளர் ; ரூபன்ராஜ்