மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை திருச்சி மாநகர் மாவட்ட மீனவர் அணி செயலாளரும், மாமன்ற குழு தலைவருமான கோ.கு. அம்பிகாபதி ஏற்பாட்டில் ஏர்போர்ட் வயர்லெஸ் ரோட்டில் அமைந்துள்ள லூப்ரா பார்வையற்றோர் இல்லத்தில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும். முன்னாள் துணை மேருமான ஜெ.சீனிவாசன் தலைமையில் வழங்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தாகம் தீர்க்கும் நீர் மோரும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் ஏர்போர்ட் விஜி, மலைக்கோட்டை அன்பழகன் , இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ரஜினிகாந்த் , தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு , ஜெயலலிதா பேரவை கருமண்டபம் சுரேந்தர் மற்றும் நிர்வாகிகள் பல திரளாக கலந்து கொண்டனர் .