1919 ம் ஆண்டு தொடங்கப்பட்ட சிட்ரோன் ஸ்டெல்லாண்டிஸ்க்கு சொந்தமான ஃபிரெஞ்ச் ஆட்டோமொபைல் பிராண்ட் ஆகும்.
இந்த நிறுவனமானது கார் தயாரிப்பில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்துள்ளது.
சிட்ரோன் கார் நிறுவனம் 100 நாடுகளை கடந்து 50 மில்லியன் கார்களை விற்பனை செய்துள்ளது.
அதேப்போன்று, ஆட்டோ மொபைல் விற்பனையில் ஜெயராஜ் குழுமம் 100 ஆண்டுகளை கடந்து கொடிகட்டி பறக்கிறது.
நூற்றாண்டு பெருமை கொண்ட
இந்த இரு நிறுவனங்களும் தற்போது கைகோர்த்து கார் விற்பனையில் அதகளம் செய்ய உள்ளனர்.
அந்தவகையில்,
திருச்சி – மதுரை பிரதான சாலையில்
பஞ்சப்பூரில்
ஜெயராஜ் நிறுவனத்தின் சார்பில் மிக பிரமாண்டமாக பிரத்யேக சிட்ரோன் கார் ஒர்க் ஷாப் திறக்கப்பட்டது.
மேலும் விற்பனை செய்யப்பட்ட சிட்ரோன் புது வகை கார்களை சிட்ரோன் பிராண்ட் டைரக்டர் சிசிர் மிஸ்ரா, ஷ்டெல்லாண்டிஸ் வணிகப்பிரிவு
இயக்குனர் சதீஷ் கண்ணன் மற்றும் ஜெயராஜ் குழும இயக்குநர் அஜய் ஜொனாதன் ஜெயராஜ் ஆகியோர் வாடிக்கையாளர்களிடம் சாவிகளை ஒப்படைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சிசிர் மிஷ்ரா,
ஃபிரான்சை தலைமையிடமாக கொண்டு உலசின் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் சிட்ரோன் கார் நிறுவனம் தனக்கென தனியான ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது.
அந்தவகையில் சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் சிட்ரோன் சி3, பசால்ட், ஏர்கிராஸ், சிட்ரோன் ,சி3, சிட்ரோன் சி5 ஏர்கிராஸ் என 5 வகையான கார்களை வாடிக்கையாளர்களின் பேராதரவோடு விற்பனை செய்து வருகிறது.
இந்திய சாலைகளில் தற்போது தனது ஆதிக்கத்தை துவக்கியுள்ள சிட்ரோன் கார்கள் வரவுள்ள நாட்களில் விற்பனையில் உச்சத்தை எட்டும் நாள் வெகு தொலைவில்
இல்லை.
தற்போதையை கால கட்டத்தில் EV கார்கள் எனப்படும் எலக்ட்டிரிக் கார்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.
தனித்துவமான வடிவமைப்பு, தோற்றம் கொண்ட சிட்ரோன் கார்களின் விலைகள் மற்ற கார்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகவே உள்ளது. ஆனாலும் வாடிக்கையாளர்கள் சிட்ரோன் கார்கள் சர்வீஸ் சென்டர்கள் போதிய அளவில் இல்லை என்ற குறைபாடு உள்ளது.
இதனை போக்கும் வகையில் மாவட்டம் தோறும் சர்வீஸ் சென்டர்கள் அமைக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.