தமிழர் திருநாளான தை பொங்கலை வரவேற்கும் விதமாக திருச்சியில் திமுக சார்பில் பல்வேறு இடங்களில் சமத்துவ பொங்கல் விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திருச்சி சாஸ்திரி சாலையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் மத்திய மாவட்ட திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது.
இந்த பொங்கல் விழாவில் கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே. என்.நேரு கலந்து கொண்டு பொதுமக்களுடன் இணைந்து சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினார்..
இந்த பொங்கல் விழாவில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினர்.
மேலும் தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், ஜெண்டை மேளம், தாரை தப்பட்டை என மேல தாளங்களுடன் கோலாகலமாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இந்த சமத்துவ பொங்கல் கொண்டாட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் வைரமணி,மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன் ,மாவட்டத் துணைச் செயலாளர் முத்து செல்வம்,
மத்திய மாவட்ட முன்னாள் துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர்,ஒன்றிய செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா, அந்த நல்லூர் கதிர்வேல்,
இளைஞர் அணி ஆனந்த்,மாணவரணி இன்ஜினியர் ஆனந்த்,
மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி,பகுதி செயலாளர்கள் மோகன்தாஸ், நாகராஜன், கமால் முஸ்தபா, காஜாமலை விஜி ,
மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் பி.ஆர்.சிங்காரம்,மாநகர அயலக அணி அமைப்பாளர் துபேல் அகமது,
மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம், புத்தூர் தர்மராஜ்,வர்த்தகரணி தொழிலதிபர் ஜான்சன் குமார்,முன்னாள் பகுதி செயலாளர் தில்லை நகர் கண்ணன்,மாநகர துணை செயலாளர் கவுன்சிலர் கலைச்செல்வி,மாவட்ட பிரதிநிதிகள் பக்கியில் மணிவண்ண பாரதி, சோழன் சம்பத்,கவுன்சிலர்கள் ராமதாஸ், மஞ்சுளா பாலசுப்பிரமணியன்,கவிதா செல்வம், புஷ்பராஜ்,வட்டச் செயலாளர்கள் வாமடம் சுரேஷ், பி.ஆர்.பாலசுப்பிரமணியன் தனசேகர், மார்சிங்பேட்டை செல்வம்,நிர்வாகிகள் இன்ஜினியர் நித்தியானந்தம்,அரவானூர் தர்மராஜன்,எம்.ஆர்.எஸ்.குமார்,ரஜினி சரவணன்,ரியல் எஸ்டேட் நடராஜன்,மகளிர் அணி கவிதா,மகளிர் தொண்டரணி மதனா,
உள்ளிட்ட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.