Tuesday, November 5, 2024
No menu items!
Google search engine
HomeUncategorizedதாயுமான சுவாமி கோவில் புதிய அறங்காவலர்கள் இன்று பொறுப்பேற்பு முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்...

தாயுமான சுவாமி கோவில் புதிய அறங்காவலர்கள் இன்று பொறுப்பேற்பு முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்…

திருச்சியின் பிரசித்தி பெற்ற ஆன்மீக திருத்தலங்களில் முக்கியமானது மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோயில். இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து தாயுமான சுவாமியை தரிசித்து வருகின்றனர். திருச்சி மாநகர திருக்கோவில்களின் பெட்டகம் என்று அழைக்கப்படும் இக்கோவிலில் கடந்த பல வருடங்களாக அறங்காவலர் குழு அமைக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர்களை நியமிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு நியமன உத்தரவை தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் பேரில் திருச்சி, மலைக்கோட்டை தாயுமான சுவாமி திருக்கோவிலுக்கு 5 பேர் கொண்ட அறங்காவலர்களை நியமித்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இக்குழுவில், திருச்சி காந்தி மார்க்கெட் மன்னார் பிள்ளை தெருவை சேர்ந்த பா.சீனிவாசன், திருச்சி, தாராநல்லூர் அலங்கநாதபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்த மு.கருணாநிதி, மலைக்கோட்டை மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தெருவை சேர்ந்த ரா.கலைச்செல்வி, திருச்சி, எடத்தெரு, கீழ நெய்க்கார தெருவை சேர்ந்த வி.ஸ்ரீதர்,காட்டூர் காவிரி நகரை சேர்ந்த மு.கோவிந்தராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஐந்து பேருக்கும் இந்து சமய அறநிலைய துறை மாவட்ட உதவி ஆணையர் லட்சுமணன் அறங்காவலர் குழு தேர்தலை நடத்தி அறங்காவலர் குழு தலைவரை தேர்ந்தெடுத்தார் அதனைத் தொடர்ந்து இன்று கோவில் அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டனர்.அவர்களுக்கு கோவில் உதவி ஆணையர்,
செயல் அலுவலர் அனிதா
திருச்சி மாநகர திமுக செயலாளரும், திருச்சி மாநகராட்சி மண்டல குழு தலைவருமான மதிவாணன்,
துணை மேயர் திவ்யா , மண்டல குழு தலைவர் ஜெயா நிர்மலா,திமுக பகுதி செயலாளர்கள்
ஆர்ஜி.பாபு,மோகன், ஏ.எம்.ஜி.விஜயகுமார், மணிவேல்,வட்டச் செயலாளர் சுருளிராஜன்,மீனாட்சி சுந்தரம், கண்காணிப்பாளர் தேவராஜ், திருமதி ஜெயலலிலா மற்றும்
சிவசங்கர்,தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கே.பி டி.பழனிவேல்,
திருநாவுக்கரசு,தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சி மண்டல தலைவர் தமிழ்செல்வம்,
,மாநகர தலைவர் எஸ்.ஆர்.வி கண்ணன் வெங்காய தரகு வர்த்தக மண்டி சங்கத்தின் செயலாளர் தங்கராஜ்,பேரமைப்பு மாநில துணைத்தலைவர் கே.எம்.எஸ்.ஹக்கீம்
பேரமைப்பு மாநில இணைச்செயலாளர்கள் தில்லை மெடிக்கல் மனோகரன்,காந்தி மார்க்கெட் கமலக்கண்ணன், திருப்பதி
பேரமைப்பு இளைஞரணி கே.எம்.எஸ் மொய்தீன், திருமாவளவன்,
அனைத்து வணிகர்கள் நலச் சங்கத்தின் பொதுச்செயலாளர் கணேசன்
மற்றும் திருக்கோயில் பணியாளர்கள்.
நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், உறவினர்கள், நண்பர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments