தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அஞ்செட்டி வட்ட குழு
கிருஷ்ணகிரி மாவட்டம் சார்பில்
100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு சம்பளம் பாக்கி உடனே வழங்கிடுக! 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்தி வழங்கிடுக! தினக்கூலி 600 ரூபாயாக அறிவித்திடுக !அனைத்து கிராமங்களிலும் குடிநீர் பிரச்சனையை தீர்த்திட கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக கோரிக்கை ஆர்ப்பாட்டம். 21.03.2025 வெள்ளிக்கிழமை காலை 10.30. மணிக்கு அஞ்செட்டி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மத்திய அரசாங்கம் அதற்கான நிதியை ஒவ்வொரு ஆண்டும் குறைத்து வருகிறது. திட்டப் பணிகளை முடக்கிடும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் 100 நாள் வேலை திட்டத்தை முறைப்படுத்தி வழங்கிட வேண்டும்.

அஞ்செட்டி வட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு முழுமையாக 100 நாட்கள் வேலை வழங்காமலும் முறையான சம்பளம் வழங்காமல் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். எனவே நூறு நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்தி வழங்கிட வேண்டும்.சம்பள பாக்கி உடனே வழங்கிட வேண்டும். நாள் ஒன்றுக்கு தினக்கூலி 600 ரூபாயாக உயர்த்தி வழங்கிட வேண்டும். திட்டப் பணிகளின் முறைப்படுத்தி வழங்கிட வேண்டும் எனவும் கடும் வெயில் காலம் என்பதால் அனைத்து கிராமங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது குடிநீர் பிரச்சினையை போர்க்கால அடிப்படையில் தீர்த்திடக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் அஞ்செட்டி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
பிறகு நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்புடன் பேரணியாக சென்று அஞ்செட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பிலும் மக்கள் சார்பிலும் மனு கொடுத்து பேசப்பட்டது.
நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்கள் மனுக்களை பெற்று பேச்சு வார்த்தையில் 20 கிராம மக்களுக்கு ஒரு வார காலத்தில் குடிநீர் பிரச்சனை தீர்ப்பதாகவும்.
100 நாள் வேலை வாய்ப்பில் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் வேலை வழங்குவதாகவும் சம்பள பாக்கியை உடனடியாக கிடைத்திட நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர். அதன் அடிப்படையில் ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.இந்நிகழ்ச்சியில் 400 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் தலைமை.
C.குமாரவடிவேல்
வட்ட செயலாளர்
முன்னிலை.
P.கோவிந்தசாமி,
R.கிருஷ்ணன்,
S.குண்டன்,
O.R.கிருஷ்ணன்,
K.சின்னசாமி
விளக்கவுரை:
தோழர்.P.பெருமாள்
மாநில செயலாளர்
தோழர்.C.பிரகாஷ்
சிபிஐ(எம்) கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர்
P.தேவராஜன்
மு.மாவட்ட குழு
வட்ட குழு உறுப்பினர்கள்
முன்னணி தோழர்கள்.
D.மாரப்பா, நெடுமாது,S.சிவகுமார்,G.மாதையன், R.சின்னசாமி, R.கிருஷ்ணன்,
M.முனிராஜ், V.கோவிந்தன், P.அம்மாசிகவுண்டர் V.மாதப்பன், M.நாராயணன், V.மதன்சங்கரன்,
B.பசுவராஜ்,
K.செல்வம், பழனியம்மாள், சுகுணாரானி, N.கர்ணன், K.கணேசன், குப்பன்,M. சுந்தரம் G.சாந்தலிங்கம், C.கோட்டையன்,
S.முனியப்பன் ஆகிய தோழர்கள் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.
G.B.மார்க்ஸ்
செய்தியாளர்