தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டம் தட்சனதிருப்பதி கிராமத்தில் மலைவாழ் மக்கள் 40 குடும்பங்கள் வசித்துவருகிறார்கள்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் இரண்டு மாதங்களுக்கு முன்பு சூளகிரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது அந்த காத்திருக்கு போராட்டத்தில் இரண்டு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள பட்டாக்களை தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நிகழ்ச்சியில் வழங்குவதாக உறுதியளித்தனர் அதனடிப்படையில் பாத்தகோட்டா கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் தலைமையில் 24 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது.
மேலும் 16 வீடுகள் புதிதாக வீடு கட்டப்பட்டுள்ளது அந்தக் குடும்பங்களுக்கு அளவீடு செய்து, வகை மாற்றம் செய்து நத்தமாக மாற்றி பட்டா வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தொடர் போராட்டத்தின் விளைவாக இந்த வெற்றி அமைந்தது
அதனை முன்னிட்டு
மாவட்ட தலைவர்
M.முருகேஷ்
வட்டத் துணைத் தலைவர் ராமச்சந்திரப்பா
வட்டத் தலைவர்
அஹ்மத்பாஷா
வட்ட செயலாளர்
T.முரளி
பொருளாளர்
நாராயணப்பா
மாவட்ட குழு உறுப்பினர்கள், வட்டக் குழு உறுப்பினர்கள் போராட்டம் வெற்றி நிகழ்வை வாழ்த்துக்கள் தெரிவித்து விடைபெற்றனர். பட்டா பெற்ற கிராமத்தினர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்திற்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
ஜி.பி மார்க்ஸ்
ஓசூர் செய்தியாளர்
இவண்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சூளகிரி வட்ட குழு
கிருஷ்ணகிரி மாவட்டம்