Friday, October 11, 2024
No menu items!
Google search engine
HomeUncategorizedதமிழ்நாடு நர்சிங் கவுன்சில் மீது குற்றச்சாட்டு…

தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் மீது குற்றச்சாட்டு…

தமிழ்நாடு நர்ஸிங் கவுன்சில் பதிவாளர் மீது குற்றச்சாட்டு …..தனியார் திறன்மேம்பாட்டு பயிற்சி மையங்களின் கூட்டமைப்பான ஸ்கில் இந்தியனின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் போஸ் திருச்சியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டியளிக்கையில் கூறியதாவது:- கடந்த செப்டம்பர் 23ம் தேதி தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் பதிவாளர் அவர்கள் காருக்குள் உட்கார்ந்து கொண்டு சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் மூன்று வகையான படிப்புகளை கூறி அதுமட்டும் செல்லும் என்றும் மற்றவை அனைத்தும் தகுதியில்லாதது போலவும், ஒருவருட, இரண்டு வருட துணைமருத்துவ வொக்கேசனல் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களை இழிவுபடுத்தியும் பேசியுள்ளார். இதுதொடர்பாக அவர்மீது காவல்துறையில் புகாரளித்துள்ளோம், அவரின் இத்தகைய செயலை ஸ்கில் இந்தியன் வன்மையாகக் கண்டிக்கின்றது. தொடர்ந்து இதுபோன்று நர்சிங் கவுன்சில் பதிவாளர் எங்களைப் போன்ற வொக்கேசனல் கல்விமையங்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார்.

இதனால் தமிழ்நாட்டில் ஒருவருட, இரண்டுவருட துணைமருத்துவப் பயிற்சிகளை நடத்திவரும் 500க்கும் மேற்பட்ட வொக்கேசனல் கல்விமையங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பதிவாளர் வெளியிட்ட வீடியோவை விசாரித்து அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், இந்தநிலை தொடராமல் இருக்க எங்களுக்கென தனிவாரியம் அமைத்து எங்களை காத்திட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றோம். இதுதொடர்பாக விரைவில் முதல்வரை சந்திக்க உள்ளோம் என்று ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் போஸ் கூறினார் .
இதில் சந்திப்பின்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஸ்கில் இந்தியன் அஸோசியேசன் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments