ஓசூர் ஜனவரி 24
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்தில் ஓசூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் விபத்து பாதுகாப்பு மற்றும் தீ தடுப்பு முறைகள் பற்றிய பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஓசூர் தீயணைப்பு துறை எஸ்எஸ்ஓ திரு.ராஜா அவர்கள் மற்றும் அவரின் குழுவினர்கள் இணைந்து பொதுமக்களுக்கு தீ தடுப்பு செயல்முறை விளக்கம்,சாலை பாதுகாப்பு ஆகியவை குறித்து விளக்கம் அளித்தனர், இந்த நிகழ்ச்சியில் வட்டாரப் போக்குவரத்து துறை இன்ஸ்பெக்டர் திரு.மணிமாறன் வட்டார போக்குவரத்து துறை அதிகாரி திரு.பிரபாகரன் வட்டாரப் போக்குவரத்து துறையைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஜி பி மார்க்ஸ்
செய்தியாளர் ஓசூர்