விநாயகர் சதுர்த்தி நிறைவு மற்றும் சிலை கரைப்பு நிகழ்ச்சி இந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பாக வெகு சிறப்பாக ஓசூர் பகுதியில் நடைபெற்றது. அந்த வகையில் ஓசூர் அரசனட்டி தமிழ்நாடு சிவ சேனா சார்பில் விநாயகர் சிலை ஊர்வலமும் சிலை கரைப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு சிவசேனா தலைவர் எம்எம் என்கின்ற முரளி மோகன், பாமகவை சார்ந்த ஹோட்டல் மணி, பிஜேபி அரசனட்டி பகுதி தலைவர் என்.ரமேஷ், ஜெய் ஸ்ரீ ராம் பாய்ஸ் குரூப்பைச் சார்ந்த அஜித் தமிழ்நாடு சிவசேனா தொண்டரணி தலைவர், கணேஷ், ராஜு, பிரகாஷ், மோகன், திருப்பதி, மோஹித் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இறுதியாக ஓசூர் தர்கா ஏரியில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.