Friday, October 18, 2024
No menu items!
HomeUncategorizedதமிழ்நாடு இந்துசமய அற நிறுவனங்களின் தணிக்கை துறை பணியாளர் சங்கத்தின் ஆண்டு பொதுக் குழுகூட்டம் திருச்சியில்...

தமிழ்நாடு இந்துசமய அற நிறுவனங்களின் தணிக்கை துறை பணியாளர் சங்கத்தின் ஆண்டு பொதுக் குழுகூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் இருந்து தணிக்கை துறையைச் சேர்ந்த அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டிருந்தனர். புதிய தணிக்கை அலுவலகங்கள் மற்றும் புதிய பணியிடங்கள் தோற்றுவித்தல் தொடர்பான கோப்பு மூன்று ஆண்டுகளுக்குமேலாக நிலுவையில் உள்ளதால் இந்து சமய அறநிறுவனங்களில் மேற்கொள்ள வேண்டிய தணிக்கைகள் தேக்கமடைந்துள்ளது. எனவே இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு புதிய பணியிடங்கள் ஏற்படுத்துவது போன்று தணிக்கை துறையிலும் புதிய பணியிடங்களை ஏற்படுத்தவேண்டும்,

இந்து சமய அறநிறுவனங்களின் தணிக்கைதுறை அலுவலர்களின் பணிச்சுமையை குறைக்க காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழக அரசுக்கும், வருவாய்த்துறைக்கும் கோரிக்கை வைத்தனர். இந்து சமய அறநிறுவனங்களின் தணிக்கை துறையில் புதிய பணியிடங்களை நிரப்பக் கோரி அமைச்சர் மற்றும் அரசிடம் பலமுறை.முறையிட்டும் கண்டு கொள்வதாக இல்லை, இது அதிகாரிகளையும், தணிக்கை துறையையும் பலவீனப்படுத்தும் வகையில் உள்ளது என குற்றம்சாட்டினர். அதேநேரம் தணிக்கைத்துறையினருக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை முழுவதுமாக செலவுசெய்யாமல் அரசு முடக்கிவிட்டது என்றும்,

அரசின் மெத்தனப்போக்கால் தணிக்கை பணிக்கு தினசரி 120 கிலோமீட்டர் தொலைவு செல்லவேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றும், பணியாளர்களின் உடல்நலன் மற்றும் வயது மூப்பினை கருத்தில்கொண்டு பணியாளர்களின் நலனைகாக்க தமிழகஅரசு முன்வரவேண்டும் என கேட்டுக்கொண்டனர். திருக்கோவில் சொத்துக்கள் முழுவதுமாக மீட்கப்பட வேண்டும், திருக்கோவில்களுக்கு வரும் உண்டியல்வருமானம் போதாது மாறாக திருக்கோவில் சொத்துக்கள் மூலம் மட்டுமே நிரந்தர வருவாய் ஈட்டமுடியும். அதே நேரம் தற்போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது போன்று, வருவாயும் அதிகரித்துள்ளதால் இந்து சமய அறநிலையத்துறையில் 800 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது, ஆனால் இந்து சமய அறநிலையத் துறையின் நிதிமேலாண்மையை கவனிக்கும் தணிக்கை துறையில் போதிய மனிதவளம் இல்லாததால் இந்தத் துறை பலவீனப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அரசு துறையை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேதனையுடன் தெரிவித்தனர்.

பேட்டி : திரு. பிரபாகரன் – மாநில தலைவர், தமிழ்நாடு இந்துசமய அறநிறுவனங்களின் தணிக்கைத்துறை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version