கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வள்ளலாரின் விவேகம் அறக்கட்டளை 5 ஆம் ஆண்டு விழா வள்ளலாரின் 202 வது விருவிக்கவுற்ற விழா மற்றும் ஜீவகாருண்ய விருது விழா ஆகியவை KAP திருமண மண்டபம் காமராஜர் காலனி ஓசூரில் ஜன 13 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.

முக்கிய விருந்தினர்களாக ஸ்ரீதர் வேம்பு (முதன்மை செயல் அலுவலர் ZOHO நிறுவனம்) ,மகா ஸ்ரீ ஸ்ரீ யுக்தேஸ்வர் சுவாமிகள் (மஹா தேவ் மஹா சமஸ்தானம்), ஸ்ரீமத் வாயு சித்த ராமானுஜ ஜீயர் (ஸ்ரீ ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் திருமடம்), சங்கர சாக்தாநந்த சரஸ்வதி சுவாமிகள் (பத்ரகாளி ஆசிரமம்) ஆகியோர் பங்கேற்றனர். ஆன்மீக மற்றும் சமூகப் பணி ஆற்றிய முக்கிய பிரமுகர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி அவர்கள் விருதினை வழங்கினார், அந்த வகையில் ஓசூரை சேர்ந்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க முக்கிய நிர்வாகியும், ஓய்வுபெற்ற நில அளவையாளரும், ஓசூர் பிரம்ம மலைப் புகழினை வெளி உலகத்திற்கு கொண்டுவர அயராது உழைப்பவரும், மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்கின்ற எண்ணத்துடன் வாழும் பிரும்மஸ்ரீ முத்துலட்சுமி அவர்களுக்கு சிறந்த சன்மார்க்க ஆன்மீகப் பணி மற்றும் சமுதாய தொன்று ஆற்றியமைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களால் பாராட்டப்பட்டு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார். பெருமைக்குரிய இந்த விழாவில் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். இந்த சிறப்புமிக்க நிகழ்ச்சியினை வள்ளலாரின் விவேகம் அறக்கட்டளையினர் வெகு சிறப்பாக செய்திருந்தனர்.
ஜி.பி.மார்க்ஸ்
செய்தியாளர் ஓசூர்