தமிழ்நாடு அரசு வேளாண்மை பட்டதாரிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாநில செயலர் ஜானகிராமன் வரவேற்புரை ஆற்றினார். கூட்டத்தில் மாநிலத் தலைவர் மணி தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஆண்டு அறிக்கையை மாநில செயலர ஜானகிராமன் வாசித்தார். நிதிநிலை அறிக்கையை மாநில பொருளாளர் மதியழகன் வாசித்தார் மாநில இணைச் செயலர் பொன்னராசன் பேசுகிறார். முடிவில் மாநில இணைச் செயலாளர் கணேசன் நன்றி கூறினார். கூட்டத்தில்
தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்க பணியில் உயரிய பணியான விதை சான்று உயிர்மசான்று துறை இயக்குநர் பணியிடம் கடந்த 18 மாதகாலமாக காலியாக உள்ளதை கருத்தில் கொண்டு அதனை தகுதிவாய்ந்த கூடுதல் இயக்குநர், இணை இயக்குநருக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.
தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்க பணியில் காலியாக உள்ள வேளாண்மை இணை இயக்குநர், வேளாண்மை துணை இயக்குநர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் ஆகிய பதவிகளை பதவி உயர்வு மூலம் நிரப்பிட வேண்டும்.
வேளாண்மைத்துறையில் வேளாண்மை உதவி இயக்குநர் பணியிடங்களை நேரடியாக நியமனம் செய்வதை நிறுத்தம் செய்து அனைத்து வேளாண்மை உதவி இயக்குநர் பணியிடங்களையும் நீண்ட காலம் பணியாற்றும் வேளாண்மை அலுவலர்களுக்கு பதவி வாயிலாக, நிரப்ப உரிய ஆணைகள் வழங்க வேண்டும்.
வேளாண்மை அலுவலர்களை அந்தந்த மாவட்டத்திலேயே பணிமாறுதல் வழங்கும் அதிகாரம் அந்த மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்களிடமே கொரோனா பாதிப்பிற்கு முன்பு வரை இருந்தது. கொரோனா பாதிப்பு காலங்களில் மறுக்கப்பட்ட பணி மாறுதல் தற்பொழுது வரை வேளாண்மை இணை இயக்குநர்களுக்கு வழங்கப்படவில்லை.எனவே வேளாண்மை இணை இயக்குநர்களுக்கஅந்தந்த மாவட்டங்களில் வேளாண்மை அலுவலர்கள் நிலை வரை பணிமாறுதல் வழங்கிட ஆணை வழங்க வேண்டும் என்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.