தஞ்சை ஆற்று பாலம் அருகே உள்ள மல்லிகா பர்னிச்சர் நிறுவனம் இன்று சிறப்பு தள்ளுபடியை அறிவித்துள்ளது. இதனால் பொருட்கள் வாங்க கடை முன்பு மக்கள் குவிந்துள்ளனர். அவர்கள் வந்த
வாகனங்களை வாசலிலே வைத்துவிட்டு கடை உள்ளே சென்று பொருட்கள் வாங்குகின்றனர். இதனால் காலையிலிருந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தற்போது கூட ஆஞ்சநேயர் கோவில் வரை வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து வருகின்றது. தள்ளுபடியை அறிவித்த மல்லிகா பர்னிச்சர் நிறுவனம் அதனை எப்படி சமாளிக்க வேண்டும் என்று யுக்தி இல்லாமல் செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தஞ்சை காவல்துறை இனிவரும் காலங்களிலாவது இதுபோன்று ஆஃபர் அறிவிக்கும் முன்பு மக்கள் சிரமத்தை போக்கவும் அவர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டும் என்பது ஒட்டுமொத்த தஞ்சை மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
செய்தி – கார்த்திக்