தஞ்சையில் பிரசித்தி பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 21 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. தற்போது 48 நாள் மண்டல அபிஷேகம் நடைபெற்று வரும் நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பணம் நகைகள் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கோவிலுக்கு வந்த இளைஞர் ஒருவர் உண்டியல் அருகே நின்று காந்தம் வைத்து நூதன முறையில் உண்டியலில் இருந்து பணம் நகைகளை திருட முயன்றுள்ளார் அதை பார்த்த கோவில் ஊழியர்கள் வாலிபரை பிடிக்க சென்றபோது தப்பி ஓடினார்.

இது குறித்து தாலுகா போலீசார் புகார் செய்து சிசிடிவி புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை வைத்து தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் கங்காபுரம் மேல தெருவை சேர்ந்த ஐயப்பன் என்றவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.