திருவண்ணாமலையைச் சேர்ந்த 14 வயது பெண் சென்னையில் தங்கி எட்டாம் வகுப்பு படித்து வருகிறார் அங்கு அவருக்கும் தஞ்சை திருவோணம்
பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் வயசு 27 சென்னையில் ஒரு ஜூஸ் கடையில் வேலை செய்யும் வாலிபருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. அந்த நிலையில் திடீரென சிறுமியின் காதலன் ஜெகதீஸ்வரன் சிறுமியை தனியாக தஞ்சைக்கு வரச் சொல்லி உள்ளார். அதனை நம்பி காதலனை பார்ப்பதற்காக கடந்த 13 ஆம் தேதி சிறுமி தஞ்சைக்கு வந்துள்ளார் அங்கு புதிய பேருந்து நிலையத்தில் காதலனுக்காக காத்திருக்கும் காதலன் ஜெகதீஸ்வரன் தொலைபேசி எடுக்காததால் இரவு நேரம் ஆனதால் புதிய பேருந்து நிலையத்தில் காதலுனுக்காக காத்துக்கொண்டு இருந்து உள்ளார். அப்போது அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த தஞ்சாவூர் அன்னை சத்யா நகர் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரன் (வயது 30)என்பவர் சிறுமியிடம் பேச்சு கொடுத்து எங்கள் வீட்டில் தங்கிக் கொள்ளலாம் என்று சிறுமியை அழைத்துக் கொண்டு புவனேஸ்வரன் வீட்டிற்கு அழைத்துச் சென்று மூன்று நாட்கள் பூட்டி வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இன்று விடியற்காலை சிறுமியை ஆட்டோவில் ஏற்றி சென்னைக்கு அனுப்ப முயற்சிக்கும் பொழுது அப்பகுதியில் வந்த ரோந்து போலீசார் விசாரணை செய்தபோது பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சிறுமி தஞ்சை வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் புவனேஸ்வரனை போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்து உள்ளனர். மேலும் சிறுமியின் காதலர் ஜெகதீஸ்வரன் சிறுமியை தனியாக வரவழைத்தற்காக அவரையும் கைது செய்துள்ளனர்.
செய்தியாளர் . வெற்றி