தஞ்சை மாவட்டம் வல்லம் அகிழாங்கரை மேட்டு தெருவைச் சேர்ந்த இசையாஸ் என்பவரின் மகன் திரண் பெனடிக் . இவர் வல்லம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார் இந்நிலையில் நேற்று மாலை சிறப்பு வகுப்பு முடிந்து சக மாணவர்களுடன் வீட்டிற்குச் செல்லும் வழியில் மாடு முட்டி உயிரிழப்பு மாணவனின் உடல் தற்போது தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து வல்லம் காவல் நிலையத்தில் புகார் அளித்தூள்ளனர்.இந்நிலையில் மாட்டின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்திற்கு மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திரண்டனர் . தகவல் அறிந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு அளிக்குமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.