Tuesday, April 29, 2025
No menu items!
Google search engine
HomeUncategorizedடாஸ்மார்க் தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம்...

டாஸ்மார்க் தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம்…

திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகில் 10.4.2025 திருச்சி மாவட்டம் ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மார்க் தொழிற்சங்ககளின் கூட்டமைப்பு சார்பாக 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது . பணி நிரந்தரம் , காலம் முறை ஊதியம் , பணியாளர்களுக்கு முறையான நிலையான , அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் போன்ற இருபது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது . டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம், என கடந்த தேர்தலில் ஆளும் அரசு அறிவித்ததை போல் நிறைவேற்றி தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது . மதுபானங்கள் ஸ்கேனிங் முறை விற்பனையில் உள்ள தொழில்நுட்ப பிரச்சனைகளை உடனடியாக சரி செய்து தர வேண்டும் என்றும் கேரளாவில் மது கூடமின்றி கணினி வழி விற்பனை சிறப்பாக நடைபெறுகிறது அது போல ,,இங்கு மது கூட கட்டுப்பாட்டில் டாஸ்மார்க் கடைகள் இயங்குவதால் முறை கேட்டிற்கு வழிவகுப்பதாக உள்ளதாகவும் , டாஸ்மார்க் கடைகள் தனித்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் , கேரளாவில் மதுக்கடை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூபாய் 50,000 வழங்கப்படுகிறது . இங்கு பத்தாயிரம் குறைந்தபட்ச ஊதியம் என வழங்கப்படுகிறது . கேரளாவைப் போன்று ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது .FL 2. மனமகிழ் மன்றங்களுக்கு மதுபானம் குறைவான விலையிலும் டாஸ்மார்க் சில்லறை கடை விற்பனைக்கு அதைவிட கூடுதல் விலையில் வழங்குவதால் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு நட்டம் ஏற்படுத்தும் நிலையை சீர்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது .End to End மதுபான விற்பனையில் ஏற்படும் தொழில்நுட்ப பிரச்சனைகளை ஆராய்ந்து சரி செய்த பிறகு இதர மாவட்டங்களுக்கு அமல்படுத்த வேண்டும் என்றும் , காலி மதுபான பாட்டில் திரும்பப்பெறும் திட்டத்தை பணி ஒரு முகாமை மூலம் செயல்படுத்த வேண்டும் என்றும் , ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஒரே கடையில் பணிபுரிபவர்களை A, B,C,- எனும் சுழற்சி முறையில் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்றும், டாஸ்மார்க் கடை சமூக பாதுகாப்பு கருதி பணி நேரத்தை இரண்டு மணி நேரம் குறைக்க வேண்டும் என்றும் , டாஸ்மார்க்கில் விற்பனையாகும் விற்பனை தொகையை சென்னையைப் போன்று அனைத்து மாவட்டங்களிலும் வங்கி மூலம் நேரடியாக வந்து வசூல் செய்ய வேண்டும் என்றும் , டாஸ்மாக் பணியாளர்கள் பாதுகாப்பிற்காகவும் டாஸ்மார்க் கடையின் பாதுகாப்பிற்காகவும் ஓய்வு பெற்ற காவலர்கள் அல்லது ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்களை நியமித்திட வேண்டும் என்றும் , டாஸ்மார்க் பணியாளர்கள் வன்முறை தாக்குதல்களால் பாதிக்கப்பட்டால் டாஸ்மார்க் நிர்வாகம் சார்பில் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றும் , டாஸ்மார்க் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த வேண்டும் என்றும் , மருத்துவ காப்பீடு திட்டம் இட்ட அட்டை வழங்க வேண்டும் , டாஸ்மார்க் புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் , டாஸ்மார்க் நிர்வாகம் புதிய முடிவுகளை எடுக்கும் போது தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும் என்றும் , டாஸ்மாக்கில் புதிதாக பணியாளர் தேர்வு செய்யப்பட்டால் இறந்த பணியாளர்களின் வாரிசுக்கு பணி வழங்க வேண்டும் என்றும் மேற்கண்ட 20 அம்ச கோரிக்கைகளை டாஸ்மார்க் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் கோசமாக முன்வைக்கப்பட்டது …..

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments