Tuesday, January 14, 2025
No menu items!
Google search engine
HomeUncategorizedசென்னை அருகே மதுராந்தகத்தில் மே 5-ந் தேதி வணிகர் தின மாநாடு வாடகை மீதான 18...

சென்னை அருகே மதுராந்தகத்தில் மே 5-ந் தேதி வணிகர் தின மாநாடு வாடகை மீதான 18 சத ஜி.எஸ்.டி வரிவிதிப்பை ரத்து செய்திட கோரி டெல்லியில் பேரணி,ஆர்ப்பாட்டம்தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுக்குழுவில் தீர்மானம்….

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலப் பொதுக்குழு கூட்டம் இன்று திருச்சியில் ஹோட்டல் ஸ்ரீசங்கீதாஸ் வளாகத்தில் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்றது. மாநிலப் பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜுலு வரவேற்புரையாற்றினார். மாநிலப் பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத்துல்லா ஆண்டறிக்கை வாசித்தார். மாநில தலைமைச் செயலாளர் பேராசிரியர் ஆர்.ராஜ்குமார் தீர்மான உரையாற்றினார்.மண்டலத்தலைவர்கள் திருச்சி எம்.தமிழ்ச்செல்வம், கடலூர் டி.சண்முகம், கோவை டி.ஆர்.சந்திரசேகரன், திண்டுக்கல் டி.கிருபாகரன், தஞ்சை எல்.செந்தில்நாதன் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.

மண்டலத்தலைவர்கள் எம்.அமல்ராஜ், சேலம் எஸ்.வைத்திலிங்கம், தூத்துக்குடி எம்.ராதாகிருஷ்ணன், மதுரை டி.செல்லமுத்து, கன்னியாகுமரி டி.பி.வி.வைகுண்டராஜா, மாநில கூடுதல் செயலாளர்கள் வி.பி.மணி, எஸ்.ராஜசேகரன், ஆர்.கே.காளிதாஸ், ஏ.கே.வி.எஸ்.சண்முகநாதன், ஆர்.சம்பத்குமார், பி.மகேந்திரவேல், மாநில செய்தி தொடர்பாளர் பி.பாண்டியராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர்கள் கந்தன், கே.எம்.எஸ். ஹக்கீம், ரெங்கநாதன், சின்னசாமி,தில்லை மெடிக்கல் மனோகரன்,மாநில இணைச்செயலாளர்கள் ஸ்ரீராமகுமார்,காந்தி மார்க்கெட் கமலக்கண்ணன்,திருப்பதி,மண்டல தலைவர் தமிழ்செல்வம்,மாவட்டத் தலைவர் ஸ்ரீதர்,மாவட்டச் செயலாளர் செந்தில்,மாவட்ட பொருளாளர் வெங்காயமண்டி தங்கராஜ்,மாநகரத் தலைவர் எஸ்.ஆர்.வி கண்ணன்,மாநகர செயலாளர்ஏ ஒன் ஓட்டல் ஆறுமுகப்பெருமாள்,மாநகரப் பொருளாளர் ஜானகிராமன்,இளைஞர் அணி தலைவர் அப்துல் ஹக்கீம்,கே.எம். எஸ் மொய்தீன்,செய்தி தொடர்பாளர் திருமாவளவன்,டோல்கேட் ரமேஷ்,தென்னூர் ரஹீம் மற்றும்தமிழக அனைத்து மாநில, மாவட்ட நிர்வாகிகள், இளைஞர் அணி, பழையபொருள் அணி, இளம்தொழில் முனைவோர் அணி, அனைத்து கிளைச்சங்க நிர்வாகிகள் அனைவரும் பெருந்திரளாக பங்கேற்றனர். முடிவில் திருச்சி மாவட்ட தலைவர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.இப்பொதுக்குழு கூட்டத்தில் வணிகர்களின் தற்போதைய நிலைபாடுகள், அரசு சட்டங்களால் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சனைகள், வணிக நிலைபாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டு கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தீர்மானங்கள்வருகிற 2025 ஆம் ஆண்டு மே-5, – ந் தேதி 42-வது வணிகர் தின மாநில மாநாட்டினை சென்னை அருகில், மதுராந்தகத்தில் நடத்திட இப்பொதுக்குழு தீர்மானிக்கின்றது. அரசின் கருவூலமாம் வணிகர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய அரசு ஊழியர்களுக்கு செயல்படுத்தப்படும் வருங்கால வைப்பு நிதி, குடும்பநல நிதி, ஓய்வூதிய நடைமுறைகளை அமல்படுத்துவதற்கான வலியுறுத்துகின்றது. நடைமுறைகளை கட்டாயம் முன்னெடுத்திட பேரமைப்புவலியுறுத்துகின்றது.தற்போது அரசுகளின் செயல்பாட்டில் இருக்கும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தின் முடிவு களை மத்திய அரசு அறிவிப்பதற்கு முன், சட்ட முன்வடிவு களை கொண்டுவரும் போதும், வரிவிதிப்பில் மாற்றங்கள் கொண்டுவரும் போதும், வணிகர் சங்க அமைப்பின் நிர்வாக பிரதிநிதிகளை அழைத்து கலந்தாய்வு செய்து முடிவெடுத்திட பேரமைப்பு வலியுறுத்துகிறது. ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட 2017ஆம் ஆண்டிலிருந்து முதல் 5ஆண்டுகளான 2022 வரை தாக்கல் செய்த கணக்குகளில் உள்ள குறைபாடுகளை அரசு எடுத்துக்கொள்ளாமல் வணிகர்கள் மீது மீண்டும் நோட்டீஸ் அனுப்பி சிரமப்படுத்தாமல் 5 ஆண்டுகளுக்கான கணக்குகள் மீது மீண்டும் எவ்வித ஆணையும் பிறப்பித்திடாத வகையில் சமாதானத் திட்டம் ஒன்றினை அறிவித்திட பேரமைப்பு வலியுறுத்துகின்றது. ஆயத்த ஆடைகள் மீதான புதிய வரி உயர்வை கைவிட்டு, கைத்தறி ஆடைகளுக்கு வரி விலக்கு அளித்து, ஆயத்த ஆடை தயாரிப்பு தொழில் நலிவடையாமல் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழில் சார்ந்த குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காத்திட இப்பொதுக்குழு வலியுறுத்துகின்றது. ஆண்டுக்கு 6% சொத்துவரி, வணிகர்களுக்கான உரிமக் கட்டண உயர்வு, தொழில்வரி உயர்வு, குப்பைவரி, குப்பைக்கான அபராதக் கட்டணங்களை விலக்கிக்கொள்ளவேண்டும். வாடகை மீதான 18% ஜி.எஸ்.டி வரிவிதிப்பை ரத்து செய்திட மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் 2025 மார்ச் மாதம் தலைநகர் டெல்லியில் கண்டனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்ட அறிவிப்பை செயல்படுத்துவது, உணவுப்பாதுகாப்பு உரிமம் பெற்றிட பேன் கார்டு இணைப்பை கட்டாயமாக்கும் அறிவிப்பை வெளியிட்டிருப்பது சிறு,குறு வணிகர்களுக்கு எதிரானது என்பதை மத்திய அரசு கவனத்தில் கொண்டு, பேன் இணைப்பை தவிர்த்திட வேண்டும் தயாரிப்புப் பொருட்களின் மாதிரிகளை (சாம்பில்) ஆய்வுக்கு எடுத்திட இலக்கு நிர்ணயித்திருப்பதையும், அதன் மீது அபராதம் விதிப்பதையும் தவிர்த்திடவேண்டும். மாதாந்திர மின் கட்டண நடைமுறையை அமல்படுத்திட வேண்டும்.பிளாஸ்டிக் பயன்பாட்டு சட்டங்கள் கடுமைபடுத்தப்படுவதற்கு முன், அதற்கான மாற்று வழிமுறைகளை ஆய்வு செய்தும், அதன் பின் விளைவு களை கவனத்தில் கொண்டும், உற்பத்தியாளர்களுக்கும், வணிகர்களுக்கும் பயனீட்டாளர்களுக்கும் பாதிப்பில்லாத நடைமுறைகளை அரசு கையாளவேண்டும்.நலிந்த வணிகர்களின் நலன் காக்க அரசு வணிகர் நலநிதியம் ஒன்றை ஏற்படுத்திட வேண்டும் வணிகர் நலவாரிய உறுப்பினராக பதிவு செய்துள்ள வணிகர்களுக்கு இழப்பீட்டுத் தொகை 10 லட்சமாக உயர்த்தி அறிவிக்கவேண்டும். தொழில் துறையினர் மற்றும் வணிகர்கள் எதிர்கொள்ளும் அதிகார அத்துமீறல்களை முடிவுக்கு கொண்டுவர, வணிக-தொழில் அதிகார ஆய்வு க்குழு உருவாக்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments