Monday, January 19, 2026
No menu items!
HomeUncategorizedசெந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை குழுமூர் கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு.

செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை குழுமூர் கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு.

அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுக்கவில் உள்ள குழுமூர் கிராம மக்கள் இன்று 08.01.26 வியாழன் காலை திடீரென செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு 100 நாள் வேலை திட்டத்தின் பணிதள பணியாளர் சுமதி மற்றும் அவருக்கு உதவியாக இருந்த அரபத் ஆகியோரை இப்பணியில் தொடரவேண்டாம் என்றும்
இனி முன்பு இப்பணியில் இருந்தவர் தொடர்வார் என்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தகவல் சொன்னாதாகவும் கிராம மக்களோடு வந்து குற்றம் சாட்டினர். மேலும் தாங்கள் எந்த ஊழல் புகாரிலும் சிக்கவில்லை, வேலையில் மெத்தனம் காட்டவில்லை என கூறியபோது எங்களுக்கு மேலிடத்திலிருந்து உங்களை நீக்கிவிட்டு முன்பு பணியில் இருந்தவரை போட சொல்லி உத்திரவு வருகிறது.நாங்கள் என்ன? செய்யமுடியும் என அதிகாரிகள் கூறுவதாகவும் இருவரும் தெரிவித்தனர்.

சுமதி மற்றும் அரபத் உடன் வந்தவர்கள் ஏற்கனவே வேலைபார்த்தவர் சரியில்லை என எங்கள் கிராம ஊராட்சியில் தீர்மானம் போட்டுத்தான் நீக்கினார்கள்.நியாமாக வேலை பார்க்கும் இந்த இருவரையும் நீக்கவேண்டிய அவசியம் என்ன? என்றும் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து அதிகாரிகள் தரப்பில் சம்பந்தப்பட்ட கிராமக்களை சமாதானப்படுத்தியபோது .சுமதி, அரபத் ஆகியோர்கள் பணியில் தொடர்வார்கள் என எழுதிகொடுத்தால் கலைந்து செல்வதாக கூறவும். இரண்டு நாட்களில் இதுகுறித்து பரிசீலித்து கடிதம் தருகிறோம் என அதிகாரிகள் உத்திரவாதம் அளித்ததை தொடர்ந்து குழுமூர் கிராமத்தினர் கலைந்து சென்றனர் இதனால் சுமார் 6 மணி நேரம் நீடித்த பரபரப்பு முற்றுகை ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.

எம்.எஸ்.மதுக்குமார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version