அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள குழுமூர் கிராமத்தில் நவம்பர் 11 ந்தேதி பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று குழுமூர் காரப்பாடி சாலை வடபுறம் பழுதடைந்த நிலையில் உள்ள அங்கன்வாடி கட்டிடம் பின்புறம் குப்பைகளுக்கிடையே அழுகிய நிலையில் கண்டவர்கள் இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் செந்துறை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

சம்பந்தப்பட்ட குழந்தை உள்ளூர் நபர்களால் குப்பையில் வீசப்பட்டதா ? அல்லது வெளியூர்காரர்கள் குழந்தையை அந்த இடத்தில் இரவு நேரத்தில் கொண்டு வந்து போட்டு சென்றனரா ? என்ற கோணத்தில் கிராம நிர்வாக அலுவர் வேல்முருகன் அளித்த புகாரின் அடிப்படையில் செந்துறை காவல் நிலைய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எம்.எஸ்.மதுக்குமார்.
