அரியலூர் மாவட்டத்தில் நவம்பர் 1 ந்தேதி உரிமை மீட்க தலைமுறை காக்க நடைபயணம் மேற்கொண்ட பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்திளார்கள் சந்திப்பில் கூறியது :
அரியலூர் மாவட்டத்தில் உள்ள மக்கள், சிமென்ட் ஆலைகளால் பல்வேறு பிரச்னைகளை ஆளாகிவருகின்றனர். ஐம்பதாயிரம் ஏக்கர் கனிம வளங்கள் எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் தூசி மாசிவினால் பாதிக்கப்பட்டு, நுரையீரல் தொற்று, சிறுநீரக கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளாலும், ஆலைகளுக்கு இயக்கப்படும் கனகரக வாகனங்களாலும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதைப்பற்றி யும், மக்களை பற்றியும் சிந்திக்காமல் சிமெண்ட் ஆலை முதலாளிகள் கோடிக்கணக்கில் சாம்பாதித்து வருகின்றனர்.அரியலூர் , பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயம், தொழில்வளம் இல்லை ஆகையால் லட்சக்கணக்கான இளைஞர்கள், இடம்பெயர்ந்து வெளிமாவட்டம், வெளிமாநிலம், வெளிநாடுகள் சென்று வேலை செய்து பிழைக்கின்றனர். ஒரு சிலர் மட்டுமே இந்த சிமென்ட் ஆலைகளால் கொள்ளையடித்து கொண்டு இருக்கிறார்கள்
கடலில் கலக்கும் கொள்ளிடம் தண்ணீரை அரியலூர் , பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஏரி, குளங்களில் நிரப்பி, விவசாயம், தொழில்வளம் பெருகவும் இதன் மூலம் வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். சோழர் பாசனத் திட்டத்தில் சோழகங்கம் ஏரியை தூர்வாரி ,ஆழப்படுத்துவதற்காக ரூ.12 கோடி ஒதுக்குவதாக தமிழக அரசு அறிவித்தது.
இதுவரை அதற்கான பணிகள் நடைபெறவில்லை. அரசாங்கம் கண்டுக்கொள்ளவில்லை. அறிவிப்போடு கிடப்பில் கிடக்கிறது. இந்த திட்டம் காலத்தின் கட்டாயம். அரியலூர் மாவட்டத்துக்கு முதல்வர், பிரதமர் என வந்தார்கள் தவிர வளர்ச்சி இல்லை. நமது முதல்வருக்கு நீர் மேலாண்மை என்ன? என்று தெரியாது. மகளிர் உரிமைத் தொகைக்காக ரூ.15 ஆயிரம் கோடி செலவிடுகிறார்கள். அந்த பணத்தை நீர் மேலாண்மைத் திட்டத்துக்கு செலவிடலாமே.
திமுக ஆட்சி வருவதற்கு முன் பள்ளிக்கரனையில் 12,500 ஏக்கர் நிலம் இருந்தது. தற்போது 2,500 ஏக்கர் நிலம் மட்டுமே இருக்கிறது. இந்த ஆட்சியில் இருக்கின்ற நிலத்தையும் அழிக்க முயற்சிக்கிறது. இந்த ஆட்சியில், போக்குவரத்து, மணலில் ஊழல்.
இந்த நரக ஆட்சியை மக்கள் அகற்றுவர்கள். இந்த ஆட்சி ஆள்வதற்கு தகுதியற்ற ஆட்சி வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக படுத்தோல்வி அடையும். அந்த அளவுக்கு மக்கள் கோபத்தில் உள்ளனர் என்றார்.
எம்.எஸ்.மதுக்குமார்.
