இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் 24-வது அகில இந்திய மாநாட்டு ஏப்ரல் 2 மதுரையில் நடைபெறுவதை ஒட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஜனவரி 24 அன்று வரவேற்புழு கூட்டம் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் சி.சுரேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் ஜெயராமன் வரவேற்புரை ஆற்ற அக்கட்சியின் மாநில குழு உறுப்பினர் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் டில்லி பாபு சிறப்புரையற்றினார். இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மூத்த உறுப்பினர்கள், இடை கமிட்டி செயலாளர்கள், கட்சிப் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

M.நந்தகுமார்
செய்தியாளர் கிருஷ்ணகிரி