மார்ச் 3 அன்று ஞாயிற்றுக்கிழமை சேலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான குங்ஃபூ மற்றும் சிலம்பம் போட்டியில் கிருஷ்ணகிரி மாவட்டம் சார்பாக கலந்துகொண்ட சூளகிரி இந்தியன் கிங் ஸ்போர்ட்ஸ் அகாடெமி கிராண்ட் மாஸ்டர் பவித்ராமன் அவர்களின் தலைமையில் 40 மாணவர்கள் பங்கேற்று 9 மாணவர்கள் முதலிடத்தையும், 14 மாணவர்கள் இரண்டாம் இடத்தையும், மற்றும் 17 மாணவர்கள் மூன்றாம் இடத்திலும் வெற்றி பெற்று போட்டியின் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவரையும் மாஸ்டர் பவித்ராமன், மாணவர்களின் பெற்றோர்கள், அப்பகுதி பொதுமக்கள் பாராட்டி மகிழ்ந்தனர்.
M. நந்தகுமார்
கிருஷ்ணகிரி செய்தியாளர்