கடலூர் மாவட்டம் வேப்பூர் -வட்டம் ஐவதுகுடி கிராமத்தில் வசித்து வந்த கார்த்திக்ராஜா, காசிவேல், பாலமுருகன் ஆகிய மூன்று வாலிபர்களும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு ஐவதுகுடி கிராமத்தில்
இருந்து நடைபயணம் சென்றபோது பிப்ரவரி 25 மாலை 3:30 மணியளவில் திட்டக்குடி வட்டம் வெங்கானூர் கிராமம் தேசிய நெடுஞ்சாலையில் பின்னால் வந்த TN46P3668 என்ற நம்பர் கொண்ட மகிழுந்து வாகனம் மோதியதில் சம்பவம் இடத்தில் கார்த்திக் ராஜா இறந்துவிட்டார்.
காசிவேல், பாலமுருகன் ஆகிய இருவரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தீவிரமாக சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தனர் கோவிலுக்கு சென்ற மூன்று இளைஞர்கள் விபத்தில் பலியான சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரகுபதி
செய்தியாளர் உளுந்தூர்பேட்டை