மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாலங்காட்டில் தனியார் வெடி தயாரிக்கும் கிடங்கு அமைந்துள்ளது. இங்கு இன்று வெடி தயாரிக்கும் பணியின் போது ஏற்பட்ட வெடி விபத்தில் கர்ணன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மூவர் படுகாயம் அடைந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி ஸ்டாலின் நேரில் சென்று விசாரணை செய்தார்.