மயிலாடுதுறையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்த கோரி குடும்பத்துடன் தர்ணா போராட்டம். மயிலாடுதுறை சீனிவாசபுரம் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய கோரி குடும்பத்துடன் தர்ணா போராட்டம் CITU தலைமையில் நடைபெற்றது.
இத்துடன் பல ஆண்டுகளாக சம்பளம் இல்லாமல் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்திடவும்.
பிரிவிற்கு இரண்டு பேரை ஒப்பந்ததாரர் மூலம் நியமனம் செய்யும் முடிவை கைவிட்டு வாரியமே ஒப்பந்த ஊழியர்களை நியமித்து நேரடியாக தினக்கூலி வழங்கிடவும், தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றவும், ஒப்பந்த ஊழியர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தோழர் N. வெற்றிவேல் அவர்கள் தலைமையிலும் மற்றும் சிஐடியு மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையிலும் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தின் தொடக்க உரையை திரு . எம். கலைச்செல்வன் சிஐடியு மாவட்ட தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.
மேலும் மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்- பிரவீன்குமார்
மயிலாடுதுறை.