Sunday, December 8, 2024
No menu items!
Google search engine
HomeUncategorizedகாலமானார் டெல்லி கணேஷ்-தமிழ்த் திரையுலகில் மேலும் ஒரு இழப்பு

காலமானார் டெல்லி கணேஷ்-தமிழ்த் திரையுலகில் மேலும் ஒரு இழப்பு

நடிகர் டெல்லி கணேசன் இறப்பு தமிழ் திரையுலகில் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பு என்றே கூற வேண்டும். கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று ராமநாதபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருடைய இழப்பு ஊர் மக்கள், அவரது உறவினர்கள் மட்டுமின்றி அவரது ரசிகர்களுக்கும் பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 80 வயதான அவர் உடல்நல குறைவு காரணமாக இயற்கை எய்தினார். அவரது உடல் ராமநாதபுரத்தில் உள்ள அவரது இல்லத்திலேயே உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

 நடிகர், வில்லன் மற்றும் குணசித்திர நடிகராக தனது நடிப்பு திறமையை காட்டியது மட்டுமின்றி, சிறந்த டப்பிங் கலைஞராகவும் விளங்கியவர் டெல்லி கணேஷ்.  தமிழ், தெலுங்கு, கன்னடம்,  மலையாளம் ஆகிய மொழிகளிலும் ரஜினி, கமல் போன்ற முன்னணி  நடிகர்கள் திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி கணேஷ் திரைப்பயணம் :

டெல்லி கணேஷ் அவர்கள் இதுவரை 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 1977 ஆம் ஆண்டு வெளியான “பட்டினப்பிரவேசம்” என்ற திரைப்படமே அவர் நடித்து வெளியான முதல் திரைப்படம் ஆகும். இவரை இயக்குனர்
கே. பாலச்சந்தர் அவர்கள் தான் அறிமுகம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

சிறந்த துணை நடிகராகவும் நகைச்சுவை நடிகராகவும் நடித்து வந்த இவர் “அபூர்வ சகோதரர்கள்” படத்தில் கமலஹாசனுக்கு வில்லனாக ‘பிரான்சிஸ்’ என்ற கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தியிருந்தார் டெல்லி கணேஷ்.

சிந்து பைரவி, நாயகன், மைக்கேல் மதன காமராஜன், தெனாலி, ஔவை ஷண்முகி, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். 1993-1994 ஆம் ஆண்டிற்கான “கலைமாமணி விருதும்” டெல்லி கணேஷ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

செய்தியாளர்
அ.காவியன்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments