கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 10 பேர் பலி 65 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்கிற கன்னுக்குட்டி (49) என்பவர் விற்ற கள்ளச்சாராயத்தை குடித்த பத்து பேர் பலி. மேலும் கல்லச்சாரத்தை குடித்த பலர் புதுச்சேரி, சேலம் ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர் விற்ற கள்ளச்சாராயணத்தில் மெத்தனால் கலந்திருப்பது கண்டுபிடிப்பு.
இந்த விவகாரத்தின் எதிரொலியாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷ்வன் குமார் ஜடாவத் பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக எம்.எஸ். பிரசாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் கள்ளக்குறிச்சி விசாரணை சிபிசிஐடி மாற்றி விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய சிங் மீனா தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ரஜத் சதுர்வேநி நியமனம்.
கள்ளக்குறிச்சி சம்பவத்தை ஒட்டி அமைச்சர் ஏ.வ. வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் கள்ளக்குறிச்சி விரைந்துள்ளனர்.
திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆய்வாளர் பாண்டிச்சேரி பணியிடை நீக்கம் ,உதவி காவல் ஆய்வாளர் பாரதி பணியிடை நீக்கம்.
கள்ளக்குறிச்சியில் கருணாபுரம் காலனி சேர்ந்த 26 பேருக்கு வாந்தி,மயக்கம்,வயிற்று வலி ஆகிய அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 16 பேர் அவசர சிகிச்சைக்காக புதுச்சேரி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அ. காவியன்
செய்தியாளர்